தேரழுந்தூரில் கம்பர் விழா

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரில் உள்ள கம்பர் கோட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் கம்பர் விழா நடைபெற்றது.

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூரில் உள்ள கம்பர் கோட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் கம்பர் விழா நடைபெற்றது.
 நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ப. தங்கையன் நினைவு அரங்கத்தில் பட்டிமன்றம் நடைபெற்றது.   கவிஞர் செம்பியூரான் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், "கம்பனில் தன் செயலால் உயர்ந்து நிற்பது வீடணனே! ' என்ற தலைப்பில் கவிஞர் வீதி. முத்துக்கனியன், முத்தமிழ் அறிவியல் மன்ற பொதுச் செயலாளர் வீர. காந்தி லெனின் ஆகியோரும்,  கும்பகர்ணனே! என்ற தலைப்பில் விழிகள் சி. ராஜ்குமார், கவிஞர் முத்து. நடராஜன் ஆகியோரும் வாதிட்டனர்.
பின்னர், கோமல் த. சுப்பிரமணியன் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டரங்கத்தில், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம்  பிடித்த தேரழுந்தூர் ஜெய்ஹிந்த் மெட்ரிக் பள்ளி மாணவி பா. மிருதுரோஷினி மற்றும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாரி பன்னீர்செல்வம், பாலு. நடேசன், சுதா அன்பழகன், அரங்கநாதன், செளரிராஜன், முனைவர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com