செம்பனார்கோயில் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், திருக்களாச்சேரி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 1.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் திருக்களாச்சேரி - பாலூர் சாலை மேம்பாட்டுப் பணி, பசுமை வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் பிரமத மந்திரி நினைவு குடியிருப்புத் திட்டம் சார்பில் ரூ. 3.80 லட்சம் மதிப்பில் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் இலுப்பூர் ஊராட்சியில் நடைபெறும் பண்டாரவாடை குளம் தூர்வாரும் பணி, திருவிளையாட்டம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் நடைபெறும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, ஈச்சங்குடியில் நடைபெறும் கடலி நாயக்கர் குளம் தூர்வாரும் பணி ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, தியாகராஜன், வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com