படகில் இருந்து கடலில் விழுந்த மீனவர் சாவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, படகில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, படகில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.
வனவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மகாலிங்கம் (47), ஆ.சுப்பிரமணியன் (25), த.தமிழ்ச்செல்வம் (55), நா.ரெங்கராஜன் (45). இவர்கள் நால்வரும் அப்பகுதியைச் சேர்ந்த ஆ. தனபாக்கியத்துக்கு (55) சொந்தமான கண்ணாடியிழைப் படகில் சனிக்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
வெள்ளப்பள்ளத்தில் இருந்து தென்கிழக்கே 14 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்த இவர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, படகின் பின்பகுதியில் அமர்ந்திருந்த மகாலிங்கம் தவறி கடலுக்குள் விழுந்தது தெரியவந்தது.
அதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கரையில் தயாராக காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை பரிசோதித்த மருத்துவ பணியாளர்கள் மகாலிங்கம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து நாகை அரசு மருத்துவமனைக்கு அவரது சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கீழையூர் கடலோரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com