நாகை ரயில்வே மேம்பால விரிசலை விரைந்து சீரமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

நாகை ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நாகை ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தில், நாகை புத்தூர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தின் ஒரு இணைப்புப் பகுதியில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி மாலை விரிசல் அதிகமானது.
மேம்பால இணைப்புப் பகுதியான எக்ஸ்பேன்சன் ஜாயின்ட் பகுதியில் அதிகபட்சம் 4 செ.மீ.  இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலையில், இப்பாலத்தின் ஒரு எக்ஸ்பேன்சன் ஜாயின்ட் பகுதியின் இடைவெளி சுமார் அரை அடி அகலத்துக்கும் அதிகம் என்ற அளவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இப்பாலம் வழியேயான போக்குவரத்து மார்ச் 25-ஆம் தேதி இரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாலம் சீரமைப்புப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர், பாலத்தில் ஏற்பட்டுள்ள  விரிசலை சீரமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றுமாறு பொறியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, ரயில்வே பொறியாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com