78 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நாகை மாவட்டத்தில் 78 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நாகை மாவட்டத்தில் 78 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை மாவட்டத்தில் 151 பள்ளிகள் உள்பட 272 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 27 அரசுப் பள்ளிகள் உள்பட 78 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 33 அரசுப் பள்ளிகள் உள்பட 85 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 78-ஆக குறைந்துள்ளது.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் :  
நீடுர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாண்டவன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி, திட்டுப்படுகை அரசு உயர்நிலைப்பள்ளி, கடலங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி, தொடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி, தில்லையாடி டி.வி அரசு உயர்நிலைப்பள்ளி, முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம்-3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி.  பஞ்சநதிக்குளம் (கிழக்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம் ஆர்.என். அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பிடாகை அரசு உயர்நிலைப்பள்ளி, சிறுதலைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பத்து (தெற்கு) அரசு உயர்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளி, விழுந்தமாவடி (கிழக்கு) அரசு உயர்நிலைப்பள்ளி.
கடிநெல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகக்குடையான் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆறுகாட்டுத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி, மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி, செருதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளப்பள்ளம் மீனவர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி, தோப்புத்துறை அரசு உயர்நிலைப்பள்ளி, நாலுவேதபதி அரசு உயர்நிலைப்பள்ளி, நரிமனம் அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் பி.வி தேவர் அரசு உயர்நிலைப்பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com