விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து,

மேற்கு வங்கத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மம்தா பானர்ஜி அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நாகை மாவட்டச் செயலர் ஜி. ஸ்டாலின் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் டி. ராசையன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிக்கலில்...
இதேபோல், நாகை அருகேயுள்ள சிக்கல் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் என். வடிவேல், விவசாயத்  தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலர் எஸ்.என். ஜீவாராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதேபோல், கீழையூர் அருகேயுள்ள மேலப்பிடாகை கடைத்தெருவில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் சித்தார்த்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்வேளூரில்...
கீழ்வேளூர் அருகேயுள்ள தேவூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் செல்வராஜ் முத்தையன் தலைமை வகித்தார். அமிர்தலிங்கம், ஜெயராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.
இதில், மேற்குவங்க மாநிலத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோஷமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com