செம்பியன்மாதேவி கோயிலில் குடமுழுக்கு விழா

நாகையை அடுத்த செம்பியன்மாதேவியில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செம்பியன்மாதேவி கோயிலில் குடமுழுக்கு விழா

நாகையை அடுத்த செம்பியன்மாதேவியில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவெடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மே 25 -இல் விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை மாலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து சனிக்கிழமை 1 ஆம் கால பூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலை 2 ஆம் கால பூஜையும், மாலையில் 3 ஆம் கால பூஜையும் நடந்தேறின.
திங்கள்கிழமை அதிகாலை யாகசாலை பூஜை, கோ பூஜை, பரிவாரங்கள் பூர்ணாஹுதியுடன் 4 ஆம் கால பூஜை முடிவடைந்தது. இதையடுத்து, காலை 6 மணியளவில் தேரடி விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. பிரதான பூர்ணாஹுதி, யாத்ரா தானம் ஆகியவைகளுக்குப்பின் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7.15 மணியளவில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா குடமுழுக்கு நடந்தேறியது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com