பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினராகப் பதிவு பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினராகப் பதிவு பெற தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பிராணிகள் நலனைப் பாதுகாத்தல், பிராணிகள் துயர் போக்குதல் போன்ற பணிகளை நோக்கமாகக் கொண்டு மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தில் உறுப்பினராக இணைய, பிராணிகள் மற்றும் விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இச்சங்கத்தில் உறுப்பினர்களுக்கான ஆண்டுச் சந்தா ரூ. 300 -ஆகவும் ஆயுள் சந்தா ரூ. 3 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினராகப் பதிவு பெறுவதற்கான இறுதி நாள் நவ. 30.
ஆர்வமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம் அல்லது நாகை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் செயல் அலுவலரை அணுகலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 94433 32957, 94431 23566, 94450 01136, 94450 32540, 94450 32541 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com