நாகை மாவட்டத்தில் 372 நியாயவிலைக் கடைகள் முன்பாக திமுக ஆர்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டத்தில் திமுக சார்பில் 372 நியாயவிலைக் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டத்தில் திமுக சார்பில் 372 நியாயவிலைக் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ. 13.50-க்கு வழங்கப்பட்ட நிலையில், ஒரு கிலோ சர்க்கரையின் விலையை ரூ. 25 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இந்த விலையேற்றத்தைக் கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் திமுக சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டத்தின் நகர்ப்புறப் பகுதிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும், நியாயவிலைக் கடைகள் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்...
நாகை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் என். கெளதமன், நகரச் செயலாளர் அ. பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் திமுக ஒன்றியச் செயலாளர் க. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கீழையூர் ஊராட்சி ஒன்றியம், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில்,  கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சரவணன், பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி நிர்வாகி இளம்சுந்தர், சிறுபான்மைப் பிரிவு பொறுப்பாளர் சுல்தான் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தராசன், பழனியப்பன், சட்டப்பேரவை உறுப்பினர் உ. மதிவாணன்,பேரூர் செயலாளர் அட்சயலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை...
மயிலாடுதுறை பகுதியில் 65, செம்பனார்கோவில் பகுதியில் 16 என மொத்தம் 71 நியாயவிலைக் கடைகள் முன்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம், தலைஞாறு...
வேதாரண்யம் நகர பொது விநியோகக் கடை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட அவைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான மா. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ், நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிக்குள்பட்ட 57 பொது விநியோகக் கடைகள் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி...
சீர்காழி, கொண்டல், ஆணைக்காரன் சத்திரம் உள்ளிட்ட 72 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், நகரச் செயலர் சுப்பராயன், நகர துணைச் செயலர் ஏ.பி.எஸ். பாஸ்கர், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கலைவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர்கள் முருகன், பிரபாகரன், ஒன்றியச் செயலர் செல்ல.சேது. ரவிக்குமார், கிழக்கு ஒன்றியச் செயலர் மலர்விழி திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குத்தாலம்...
குத்தாலம் பகுதியில் 34 இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
குத்தாலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி. கல்யாணம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலர் க. அன்பழகன், பேரூர் செயலாளர் சம்சுதீன், காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், திருவாலங்காடு, கோமல், மங்கநல்லூர், திருமணஞ்சேரி, தேரழந்தூர், வானாதிராஜபுரம், கடலங்குடி, ஸ்ரீகன்டபுரம், பழையகூடலூர், கோனேரிராஜபுரம், கிளியனூர், அரிவளூர், தத்தங்குடி உள்ளிட்ட 34  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பூம்புகார்....
பூம்புகார், திருவெண்காட்டு, மேலையூர் உள்ளிட்ட 50 பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், திமுக ஊராட்சிச் செயலர் துரைராஜன், கிழக்கு ஒன்றியச் செயலர் சசிகுமார், ஒன்றியப் பொருளாளர் பாண்டியன், மாவட்டப் பொருளாளர் ரவி, ஒன்றிய மீனவரணி செயலர் பாலா, பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
நாகை மாவட்டத்தில் 372 கடைகள் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக காவல்துறை கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com