நாகை மாவட்டத்தில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி: ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில் 2 கடலோர கிராமங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த ஒத்திகை மற்றும் பயிற்சி வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் 2 கடலோர கிராமங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த ஒத்திகை மற்றும் பயிற்சி வெள்ளிக்கிழமை (நவ. 24) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களுக்கான சுனாமி முன்னெச்சரிக்கை குறித்த விவரங்களை ஹைதராபாத்தில் உள்ள இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில், ஒரு சில கிராமங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்ட ஒத்திகை மற்றும் பயிற்சி நவ. 24 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சுனாமி சீற்றம் ஏற்பட்டால், இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி எச்சரிக்கை முன்னறிவிப்புகளைப் பெற்று, அந்தத் தகவல்களை அரசுத் துறைகள் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திறனை சோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் வட்டத்துக்குள்பட்ட விழுந்தமாவடி, சீர்காழி வட்டத்துக்குள்பட்ட கீழையூர் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளது.
அச்சம் வேண்டாம்...
சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை, பயிற்சிக்கான  மாதிரி ஒத்திகை மட்டுமே என்பதால்,பொதுமக்கள் யாரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com