ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாள்கள் பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாள்கள் பணி வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாள்கள் பணி வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, திட்ட பணிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வேலை உறுதித் திட்ட பணி நாள்களை 200-ஆக உயர்த்த வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்ட தினக்கூலியை ரூ. 400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.
வறட்சியால் வேலையிழப்புக்குள்ளான விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகை உதவித் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில்...
நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் பி. கல்யாணசுந்தரம், ஒன்றியச் செயலாளர் கே. நாகரெத்தினம் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கோ. பாண்டியன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி. ராமலிங்கம், விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வி. சரபோஜி, கட்சியின் மாநில சிறுபான்மைக் குழுத் துணைத் தலைவர் ஏ.பி. தமீம் அன்சாரி, கீழையூர் ஒன்றியச் செயலாளர் டி. செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரெ. இடும்பையன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.கே. கிருஷ்ணமூர்த்தி, நகரச் செயலாளர் எம்.எஸ். ஷேக்  இஸ்மாயில், நகரத் துணைச் செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொள்ளிடத்தில்...
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தனசேகரன் தலைமை வகித்தார்.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன், ஒன்றியத் தலைவர் பிரபு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீர்காழியில்...
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின்  ஒன்றியத்  தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் நீதிசோழன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் கே. மாரியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கே. வைத்திலிங்கம், பொருளாளர் ஜி.கே. நாகராஜன், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் த. நாராயணன், ஒன்றியச் செயலாளர் சிவகுரு. பாண்டியன் ஆகியோர் பேசினர்.  முன்னதாக, முக்கிய வீதிகள் வழியே பேரணி நடைபெற்றது.
தலைஞாயிறில்...
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி. பழனிசாமி, ஒன்றியத் தலைவர் டி. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், செம்பனார்கோயில், குத்தாலம், திருமருகல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 2,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
திருவாரூரில்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலர் ஞானமோகன், எஸ். வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com