அரசின் மானியத் தொகை ரூ. 65 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார்

நாகப்பட்டினத்தில் கல்லூரிக்கு அரசு வழங்கிய மானியத்தில் ரூ. 65 லட்சம் கையாடல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் கல்லூரிக்கு அரசு வழங்கிய மானியத்தில் ரூ. 65 லட்சம் கையாடல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம், பங்களா தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் ஸ்ரீதேவி என்பவர், நாகை மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகார் மனு:
நான் நாகையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் எஜூகேஷனல் மற்றும் கல்ட்சுரல் சொசைட்டியில் உறுப்பினராக உள்ளேன். இது சங்க சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த சொசைட்டி நிர்வாகத்தின் கீழ் கல்லூரி இயங்கி வருகிறது.
அரசால் வழங்கப்படும் மானியம் 90 சதவீதமும், அறக்கட்டளையால் 10 சதவீதமும் வழங்கப்பட்டு இந்த நிர்வாகம் செயல்படுகிறது. இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு முதல்வர் பணி வழங்கி ரூ. 40,45,597 யும், பின்னர் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி ரூ. 2,45,913 யும், கட்டடவியல் பிரிவு வரைபடவாளரின் பணி நீக்கக் காலத்தை மாற்றியமைத்து ரூ. 12 லட்சம் உள்பட ரூ. 65 லட்சம் வரை அரசு வழங்கும் மானியத் தொகை கையாடல் செய்யப்பட்டுள்ளது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீதேவி அளித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com