ப்ரைம் கல்லூரியில் கலை இலக்கியப் போட்டிகள்

நாகை அருகேயுள்ள கீழ்வேளூர் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

நாகை அருகேயுள்ள கீழ்வேளூர் ப்ரைம் கல்வியியல் கல்லூரியில், கல்லூரிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஏவி. பாலு தலைமை வகித்தார். தாளாளர் என். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு  அழைப்பாளராக தஞ்சாவூர் ரோட்டரி கிளப் நிர்வாகி என். மணிமாறன், நாகை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இ. ராஜ், சி. சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
போட்டிகளில் நாகை, திருவாரூர் பகுதியைச் சேர்ந்த 19 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று பயனடைந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லூரி முதல்வர் வி. பொன்னி, கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஆர். பால்ராஜ், விரிவுரையாளர்கள் பி. ஜெயக்குமார், என். சுதா, கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொ) பி. விஜயாள், கல்வியியல் கல்லூரி துறைத் தலைவர் சி. திருநாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com