கிராமக் கோயில் பூஜாரிகள் பேரணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையினர் பங்கேற்ற ஆன்மிக கலாசார ஊர்வலம் மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவையினர் பங்கேற்ற ஆன்மிக கலாசார ஊர்வலம் மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள கிராமக் கோயில்களின் பூஜாரிகள் பங்கேற்ற ஆன்மிக கலாசார ஊர்வலம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் தலைவர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமை வகித்தார். காவிரி மகா புஷ்கரம் விழாக் குழுவின் செயலர் ச. முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன், இணைச் செயலர் அப்பர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலாடுதுறை அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் முன்பு தொடங்கிய இப்பேரணி, கச்சேரி சாலை, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரியக்கடை வீதி வழியாக துலாக்கட்ட காவிரிக்கு வந்தடைந்தது.
பேரணியில் பங்கேற்ற கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மற்றும் இந்து கலாசார ஸ்மிருதி, அகில பாரத துறவியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காவிரித் தாய், பரிவாரத் தெய்வங்களின் படங்கள் மற்றும் கும்பங்களை கையிலேந்தியவாறு சென்றனர்.
தொடர்ந்து, துலாக்கட்ட காவிரியில் நடைபெற்ற லலிதா சகஸ்ர நாமம்,விஷ்ணு சகஸ்ர நாமம், பாராயணம் மற்றும் காவிரி ஆரத்தி வழிபாடுகளில் பங்கேற்றனர். பேரணி நடைபெற்றபோது, நகரின் முக்கிய சாலைகளின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com