மதுவிலக்கு குற்றங்களில்  கைப்பற்றப்பட்ட  வாகனங்கள் செப். 26-இல் பொது ஏலம்

மதுவிலக்கு குற்றங்களின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் செப். 26-ஆம் தேதி நாகையில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என நாகை மாவட்ட

மதுவிலக்கு குற்றங்களின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் செப். 26-ஆம் தேதி நாகையில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 25 வாகனங்களும்,  சிஆர்பிசி- 102 வழக்கில் கைப்பற்றப்பட்டு உரிமம் கோரப்படாத 228  வாகனங்களும், செப். 26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.  இந்த வாகனங்கள்,  நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை ஏலத்தில் வாங்க விரும்புவோர் செப். 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் வாகனங்களை நேரில் பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்பவர்கள்,  செப். 26- ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365 - 240430 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com