மகளிர் கல்லூரியில் மூலிகை மருத்துவ வளர்ச்சி தேசிய கருத்தரங்கம்

மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உயிர் வேதியியல்துறையுடன், சென்னை ரெட்மெட் மெடிக்கல் சர்வீஸ் இணைந்து, மூலிகை மருத்துவ வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கத்திற்கு கல்லூரி தாளாளர் வி.திவாகரன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக சித்த மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ஜெ.அன்பு ஜெப சுனில்சன், புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.டி.வி.லெட்சுமி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் ஏ.ஆறுமுகம், சென்னை ரெட்மெட் மெடிக்கல் சர்வீஸ் உற்பத்தி பிரிவு மேலாளர் ரூகுல்அமின் ஆகியோர் சித்த மருத்துவத்தின் பயன்கள், மூலிகைகளால் மக்கள் நல்வாழ்வு பெறும் வழிமுறைகள், பக்க விளைவுகள் இல்லா மூலிகை மருத்துவத்தின் அவசியம் குறித்து விளக்கினர்.
இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு மாணவ,மாணவியர் கலந்துகொண்டு தங்களின் ஆய்வை சமர்ப்பித்தனர். நிகழ்ச்சியில் தேசிய கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் எஸ்.அமுதா, துணை முதல்வர் ஆர்.சரவணமுத்து, உயிர் வேதியியல் துறை தலைவர் ஆர்.அனுராதா, துறை பேராசிரியர் ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com