வேதாரண்யம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்கள் 8 பேரை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
வேதாரண்யம் பகுதி ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நாதன் மகன் சுரேஷ்குமார்(32). இவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் 5 மீனவர்கள் வெள்ளிக்கிழமை பகல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதேபோல், அதே பகுதி கணேசன் மகன் ஆறுமுகத்துக்கு (35) சொந்தமான மற்றொரு கண்ணாடியிழைப் படகில் 3 மீனவர்கள் சென்றனர்.
இவர்கள் 8 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே வெள்ளிக்கிழமை இரவு வலை விரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். சனிக்கிழமை அதிகாலை அங்கு படகில் வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பதாகக் கூறி 8 மீனவர்களையும் விரட்டினர். இதனால், சனிக்கிழமை பகல் கரை திரும்பிய மீனவர்கள், இதுகுறித்து கடலோரக் காவல் தனிப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com