நல்லூர் உப்பனாற்று கரை உடைப்பை சரிசெய்ய கோரிக்கை

சீர்காழி அருகே கடந்த மழை மற்றும் வெள்ளத்தின்போது உப்பனாற்றங்கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே கடந்த மழை மற்றும் வெள்ளத்தின்போது உப்பனாற்றங்கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள நல்லூர் உப்பனாறு ஆச்சாள்புரம், பாவட்டமேடு, ஆரப்பள்ளம், கோதண்டபுரம், பழையபாளையம், பன்னங்குடி, ஆலாலசுந்தரம், மாணிக்கவாசல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களின் வடிகாலாகத் திகழ்கிறது. இப்பகுதியில் மழைக்காலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீரை எளிதில் கடலுக்குள் அனுப்பிவிடும் இந்த உப்பனாறு, விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்குகிறது.
மேலும், தண்ணீரை எளிதில் வடியவைப்பதில் உப்பனாறு முக்கிய பங்கு வகிப்பதால், மழைக்காலங்களில் நெற்பயிர் பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு முக்கியப் பங்காற்றிவரும் நல்லூர் உப்பனாற்றின் இடது கரையில் கடந்த பருவமழையின் போது ஆற்றின் இருகரையிலும் தண்ணீர் திரண்டு வந்தது. இதனால், ஆற்றின் இடது கரையில் கொடக்காரமூலை என்ற இடத்தில் உடைப்பு  ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து  அனைத்து விவசாய சங்கக் கூட்டமைப்பின் கொள்ளிடம் வட்டாரச் செயலாளர் விஸ்வநாதன் கூறியது:
நல்லூர் உப்பனாற்றின் இடது கரை மிகவும் மெலிந்துள்ளது. கடந்த மழையின்போது, ஆற்றின் இடது கரையில் 1 கிலோமீட்டர் தூரத்தில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போது தற்காலிகமாக மணல் மூட்டைகள் போட்டு அடைத்தும் பயனில்லை. எனவே நிரந்தரமாக உடைப்பு எற்படாமல் இருக்க 1 கிலோமீட்டர் தொலைவுக்குக் கரையில் நிரந்தர கான்கிரீட் சுவர் அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com