மயிலாடுதுறையில் எக்ஸ்னோரா சங்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா

மயிலாடுதுறையில் எக்ஸ்னோரா சங்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா,  மரக்கன்றுகள், விதைப் பந்துகள் மற்றும் ஏழ்மை நிலையில்

மயிலாடுதுறையில் எக்ஸ்னோரா சங்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா,  மரக்கன்றுகள், விதைப் பந்துகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
எக்ஸ்னோரா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தின நாளில், சமூகப் பணிகளில் ஈடுபாடுமிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, 15 -ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எக்ஸ்னோரா சங்கத்தின் மயிலாடுதுறை தலைவர் ஏ.ஆர். அசோக் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜெனிபர் எஸ். பவுல்ராஜ், கவிஞர் இரா. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
3 பேருக்கு அப்துல் கலாம் விருது: இவ்விழாவின்  சிறப்பு நிகழ்ச்சியாக, மயிலாடுதுறை மகா ஈஸ்வர்  மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் நிறுவனர் குங்கும  ஈஸ்வரி, அபிநயா நாட்டியப் பள்ளியின் குரு கே. உமாமகேஸ்வரி, தட்டச்சுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி அட்சயா ஆகியோருக்கு எக்ஸ்னோரா சங்கத்தின் சார்பில் அப்துல் கலாம் விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைப் பந்துகள், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகளும் வழங்கப்பட்டன.
சென்னை எம்.ஜி.ஆர்.  திரைப்படைக் கல்லூரியின் முதல்வர் ஜெ.வி. மோகனகிருஷ்ணன், ஏவிசி கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன், முதன்மையர் முனைவர் எஸ். மயில்வாகனன், திரைப்பட நடிகர் ஓம். கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுப் 
பேசினர்.
மயிலாடுதுறை கிட்ஸி மழலையர் பள்ளியின் முதல்வர் ரம்யா ராமலிங்கம், ரெப்கோ வங்கியின் மேலாளர் ராமலிங்கம் மற்றும் எக்ஸ்னோரா சங்க நிர்வாகிகள், சேவை சங்கத்தினர் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com