தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் சனிக்கிழமை நிவாரணம் வழங்கினார்.

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் சனிக்கிழமை நிவாரணம் வழங்கினார்.
திருவிளையாட்டம் ஊராட்சி, செüரிராஜன் தெருவில் வசிப்பவர் ராஜமாணிக்கம் (65). இவரது மகன் ஸ்டாலின் (35). இவர்களது குடிசை வீட்டில் சனிக்கிழமை எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், பீரோ மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமான பொருள்கள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்து வந்த பெரம்பூர் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசு உதவித்தொகை ரூ.5,000 மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினார். அவருடன் வட்டாட்சியர் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் பாக்கியவதி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com