வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள் கண்காணிப்பு

சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு, கண்காணித்து வருகின்றனர் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை தெரிவித்தார். 

சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் அரசு அதிகாரிகள் முகாமிட்டு, கண்காணித்து வருகின்றனர் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை தெரிவித்தார். 
சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைகளைத் தாண்டி வெள்ளைமணல், முதலைமேடுதிட்டு, சந்தப்படுகை, நடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராமங்களில் முகாமிட்டு வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்துவரும் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், காவல் துறையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முகாமிட்டு, நிலைமையை கண்காணித்துவருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் தற்போது, 2.10 லட்சம் கன அடியாக உள்ள நீர்வரத்து, 3.5 லட்சம் கன அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இந்த பேட்டியின்போது, மாவட்ட திட்ட இயக்குநர் சங்கர், கோட்டாட்சியர் தேன்மொழி, பொதுப்பணித் துறை மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ஆசைதம்பி, வட்டாட்சியர் சங்கர், ஒன்றிய ஆணையர் 
அன்பரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com