தமிழின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: பழ. கருப்பையா

தமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார் பழ.கருப்பையா.

தமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார் பழ.கருப்பையா.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தந்தை பெரியார், மா.மீ. அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா பேசியது: தமிழில் இருந்துதான் பிற நிலை திராவிட மொழிகள் உருவாகின.திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் ஒன்றே. இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும், தமிழுக்கென தனித் திறன் உண்டு.  தமிழ் மக்களின் தொன்மை கலை, இலக்கியம், கலாசாரம் அனைத்தும் உலகில் ஒப்பற்றதாக திகழ்கிறது. தற்போது, தமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பது அவமதிப்பு என்றார் பழ.கருப்பையா. விழாவுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மா. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன், வர்த்தகர் மாவட்டத் தலைவர் அம்பாள்.குணசேகரன், அரிமா சங்க முன்னாள் ஆளுநர் எஸ். வேதநாயகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கவிஞர் புயல்குமார், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com