ஆயக்காரன்புலம் - பன்னாள் இணைப்பு தரைப் பாலம் ரூ.2.44 கோடியில் உயர்மட்ட பாலமாக மாற்றியமைக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே ஆயக்காரன்புலம் - பன்னாள் இணைப்பு தரைப் பாலம் ரூ. 2.44 கோடியில்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே ஆயக்காரன்புலம் - பன்னாள் இணைப்பு தரைப் பாலம் ரூ. 2.44 கோடியில் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க அரசு அனுமதித்துள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை பிரதான சாலையின் பக்கவாட்டில் சென்று கடலில் இணைகிறது மானங்கொண்டான் வடிகால் ஆறு.
பன்னாள் சாலை நிறுத்தம் பகுதியில் ஆயக்காரன்புலம் - பன்னாள் போக்குவரத்துக்கு ஏதுவாக இந்த ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட இணைப்பு தரைப் பாலமாக உள்ளது.
இந்த பாலத்தின் வழியே திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கம் போன்ற கிராமப்புற மக்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தின்போது ஆற்றில் வெள்ளம் அதிகரித்து பாலத்தை மூழ்கடித்துச் செல்லும். இதனால், அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால், தரைப் பாலத்தை உயர் மட்டப் பாலமாக அமைக்க அப்பகுதி மக்கள் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தரைப் பாலம் ரூ. 2.44 கோடியில் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதையும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதையும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை தெரிவித்தார்.
அப்போது, ஊராட்சி முன்னாள் தலைவர் இரா. கிரிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com