பயிர்க் காப்பீடு இழப்பீடு கோரி ஜன. 24-இல் காத்திருப்புப் போராட்டம் நடத்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டை உடனடியாக வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூண்டியில் ஜன. 24 -ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டை உடனடியாக வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூண்டியில் ஜன. 24 -ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்துவதென அக்கட்சியின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றிய 23 -ஆவது மாநாடு திருப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்றது. பொறுப்பாளர்கள் ஏ. நாகராஜன், என். முருகையன், எஸ். மல்லிகா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி. தம்புசாமி மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிச்சாமி, பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் டி. செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் டி. நாராயணன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சம்பந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் சோமு. இளங்கோ, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வி. பழனிச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். மேகலா, கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் கே. கைலாசம் ஆகியோர் பேசினர்.
கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலாளராக டி. செல்வம், துணைச் செயலாளராக வி. சுப்பிரமணியன், பொருளாளராக எஸ். சிவதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். செல்வராசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவுரையாற்றினார்.
இந்த மாநாட்டில், ஊரக வேலை உறுதித் திட்ட பணி நாள்களை நீட்டிக்க வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் பொது சுகாதாரம் உள்ளிட்டவைகளை உறுதி செய்ய உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.
பயிர்க் காப்பீடு இழப்பீட்டை உடனடியாக வழங்கக் கோரி, திருப்பூண்டியில் ஜன. 24 -ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com