ஓட்டுநர்களுக்கு பொங்கல் பரிசு

அதிமுக சார்பு அணியான அண்ணா தொழிற்சங்கம் சார்பில், கார், வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலச் சங்கத்தினருக்கு பொங்கல் பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அதிமுக சார்பு அணியான அண்ணா தொழிற்சங்கம் சார்பில், கார், வேன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நலச் சங்கத்தினருக்கு பொங்கல் பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்க மாவட்டச் செயலர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி. குமார், ஓட்டுநர்கள், உரிமையாளர்களுக்கு சட்டை,வேட்டி அடங்கிய பொங்கல் பரிசுகள் வழங்கினார். இதில், அதிமுக நகரச் செயலர் ஏ.டி. மாதவன், ஒன்றியச் செயலர் கா. தமிழ்ச்செல்வம், பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், சங்க நிர்வாகிகள் கேசவன், காத்தமுத்து, சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டி.டி.வி. அணி சார்பில்...
மன்னார்குடி, வாடகை கார் நிறுத்த வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதிமுக (டிடிவி அணி) அண்ணா தொழிற் சங்கச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சங்க சிறப்புத் தலைவரும், அதிமுக (டி.டி.வி.அணி) மாவட்டச் செயலருமான எஸ். காமராஜ் பங்கேர்று கார், வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்களுக்கு வேட்டி, சட்டை அடங்கிய பொங்கல் பரிசு பை வழங்கினார். இதில், முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ், சங்க நிர்வாகிகள் எஸ். மாதவன், தம்பி. தேவேந்திரன், கே. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com