கொள்ளிடத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கொள்ளிடம் ஒன்றியம்) 28 - ஆவது மாநாட்டில் கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என

சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கொள்ளிடம் ஒன்றியம்) 28 - ஆவது மாநாட்டில் கொள்ளிடத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமரர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, பி. பூராசாமி நினைவரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் குழு நிர்வாகி கே. கஜேந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் ஜீவமணி, விவசாய சங்க நிர்வாகி சம்பந்தம், விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகிகள் நினைவு ஸ்தூபியை பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலர் எம். செல்வராசு மாநாட்டுக் கொடியேற்றி வைத்தார். மாநிலக் குழு நிர்வாகி சீனிவாசன் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலர் கே.எஸ். சிவராமன் வேலை அமைப்பு நிலை அறிக்கை வாசித்தார்.
கொள்ளிடம் ஆற்றில் முகத்துவாரத்தில் கடல்நீர் உட்புகாதவகையில் தடுப்பணைக் கட்ட வேண்டும், அகரஎலத்தூர், மாதிரவேளூர் ஆகிய இடங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைக் கட்டவேண்டும், திருமுல்லைவாசல் ஊராட்சியை மையமாக வைத்து புதிய ஊராட்சி ஒன்றியமும், கொள்ளிடத்தை தனி தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் இடும்பையன், நிர்வாகிகள் வழக்குரைஞர் சுந்தரய்யா, வீரசேனன், சஞ்சீவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com