நாங்கூர் நாராயணப் பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருட சேவை: ஜன. 18 -இல் நடைபெறுகிறது

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விழா வரும் 18 -ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோயிலில் 11 பெருமாள்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விழா வரும் 18 -ஆம் தேதி இரவு நடைபெறுகிறது.
திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் 11 பெருமாள் கோயில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இங்கு மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை மறுநாள் இரவு 11 பெருமாள் உத்ஸவர்கள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு வரும் 18 -ஆம் தேதி இரவு தங்க கருட சேவை விழா நடை
பெறுகிறது.
முன்னதாக, 17 -ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் திருநகரியிருந்து திருமங்கையாழ்வார் புறப்பாடாகி குறவளூர், குறையலூர், மங்கைமடம், காவாளம்பாடி, திருமேனிக்கூடம், பார்த்தன்பள்ளி ஆகிய பெருமாள் கோயில்களுக்குச் சென்று பெருமாள்களுக்கு அழைப்பு விடுக்கும் ஐதீகமும், பின்னர் நைனிபுரம் மஞ்சள்குளி மண்டபத்தில் திருமங்கையாழ்வாருக்கு தீர்த்தவாரி, மஞ்சகுளி உத்ஸவம் நடைபெறவுள்ளது.
பின்னர், 18 -ஆம் தேதி அதிகாலை செம்பொன்னரங்கர், புருஷோத்தமப் பெருமாள், பள்ளிகொண்டபெருமாள், குடமாடுகூத்தர் உள்ளிட்ட பெருமாள் கோயில்களுக்கு திருமங்கையாழ்வார் எழுந்தருளி அழைப்பு விடுக்கும் நிகழ்வு நடைபெறும்.
18 -ஆம் தேதி மாலை 11 பெருமாள்களும் நாங்கூர் மணிமாடகோயிலுக்கு எழுந்தருள்வதும், பெருமாள்களை திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடி கோயில் வாசலில் நின்று வரவேற்பு கொடுக்கும் ஐதீகம் நடைபெறும். பின்னர், 11பெருமாள்களும் 11மாடங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு இரவு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், திருமங்கையாழ்வார், குமுதவள்ளி நாச்சியாருடன் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், 11 பெருமாள் கருட சேவை விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர். மேலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் வாசுதேவன் மேற்பார்வையில், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com