மயிலாடுதுறை கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மற்றும் மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மற்றும் மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி மன்றக்குழு உறுப்பினர் ஜி. மகேஷ், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன், பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். பாலசுப்பிரமணியன்,தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் ஏ. வளவன், பேராசிரியர் முனைவர் எஸ். விஜயராஜ், கல்லூரி நூலகர் முனைவர் செந்தில்நாயகம், பொருளியல் துறைத் தலைவர் முனைவர் எஸ். ராமசாமி, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் எம். மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏவிசி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. தமிழ்வேலு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எம். மூர்த்தி, எஸ். ஜெயக்குமார், ஜி. கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
பெஸ்ட் கல்வியியல்
கல்லூரியில்...
மயிலாடுதுறை வட்டம், மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற சமுத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாக அலுவலர் வி. ராமன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெ. குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், நீடூர் நஸ்ரூல் முஸ்லிமின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஏ. நஜிமுதீன் பங்கேற்று, பொங்கல் விழாக் குறித்துப் பேசினர். விழாவின்போது மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாணவி டி. ரம்யா வரவேற்றார். மாணவி பி. வித்யா நன்றி
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com