ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசியச் செயலர் எச். ராஜாவை கண்டித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் 

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசியச் செயலர் எச். ராஜாவை கண்டித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், வேதாரண்யம், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டாரத் தலைவர் மு. மோகன்தாஸ் தலைமை வகித்தார்.  வட்டாரச் செயலர் கு. வைத்தியநாதன், மாவட்டத் துணைத் தலைவர் இள. மணிமொழி, பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் கவிஞர் புயல் குமார், எஸ்.எஸ். ஆசைத்தம்பி, தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ப. பார்த்தசாரதி, ஜெயசீலன், ஆசிரியர் ஜெய. கந்தசாமி உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில்....
எச். ராஜாவை கண்டித்து மயிலாடுதுறை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் மன்ற நகரச் செயலர் வை. மணிமாறன், மன்றத்தின் மயிலாடுதுறை கல்வி மாவட்டச் செயலர் ஜெ. மணிவாசகம், ஒன்றியத் தலைவர் வே., கந்தன், பொருளர் ரா. சுரேஷ் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com