பயிர்க் காப்பீடு: அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் 2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து, அனைத்து கட்சிகள்

சீர்காழியில் 2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் கடந்த 2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்வதில் வருவாய்த்துறை அதிகாரிகள், வங்கி அலுவலர்கள், புள்ளியல் துறை மற்றும்  விவசாயத்துறை அலுவலர்கள் செய்த தவறுகளால் இதுவரை விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு முழுவதுமாக வழங்கப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அனைத்து கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா எம். முருகன் தலைமை வகித்தார். நகர திமுக  செயலர் சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர்  செல்லப்பன், கொள்ளிடம் ஒன்றியச் செயலர் சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழுவைச் சேர்ந்த பி. சீனிவாசன், ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி செயலர் முசாஹூதீன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலர் பெரியார் செல்வம், மக்கள் அதிகாரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் த. ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில்  ஒன்றிய திமுக செயலாளர்கள் சசிக்குமார், செல்ல சேதுரவிக்குமார், மலர்விழி,  மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி. கலைவாணன், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com