புதிய மருத்துவ கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ. 5.16 கோடி செலவில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு (டயாலிசிஸ்), சிசு மற்றும் பச்சிளம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ரூ. 5.16 கோடி செலவில் ரத்த சுத்திகரிப்பு பிரிவு (டயாலிசிஸ்), சிசு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவு பகுதி உள்ளிட்ட பிரிவுகள் அடங்கிய இரட்டை தளம் கொண்ட கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், தமிழக துணி நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவில், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் அதிமுகவினர் பங்கேற்றகவுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com