உப்பனாற்றில் 31 விநாயகர் சிலைகள் கரைப்பு

சீர்காழி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 31 விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை உப்பனாற்றில் கரைக்கப்பட்டது. 

சீர்காழி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 31 விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை உப்பனாற்றில் கரைக்கப்பட்டது. 
சீர்காழியில் நிகழாண்டு ஆபத்துகாத்த விநாயகர், இரட்டை விநாயகர், வீரசக்கி விநாயகர், ருத்ரவிநாயகர், குமரகோயில் விநாயகர், மங்களவிநாயகர் உள்ளிட்ட  37 இடங்களில் விநாயகர் சிலைகள் புதன்கிழமை  பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
இதில், வியாழக்கிழமை 6 சிலைகள் கரைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு பின்னர் அனைத்து கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு ஒவ்வொன்றாக பலவண்ண மலர்கள், மின்அலங்காரத்துடன் புறப்பட்டன. முக்கிய வீதிகளின் வழியாக 31 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மேலமடவிளாகம், கச்சேரிசாலை,தென்பாதி வழியாக சென்று உப்பனாற்றில் கரைக்கப்பட்டது. இதில், பாஜக கோட்ட பொறுப்பாளர் தங்க. வரதராஜன், நிர்வாகிகள் செல்வம், குருமூர்த்தி,அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com