பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யாத ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம்: மாநகராட்சி முடிவு

தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்யாத ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


தெற்கு தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்யாத ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக எஸ்டிஎம்சி கல்வித் துறைத் தலைவர் ஜே.எல்.குப்தா சனிக்கிழமை கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் வருகைப் பதிவை துல்லியமாகப் பேணும் வகையில், பயோ மெட்ரிக் முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையைப் பின்பற்றுவதில்லை எனப் புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பயோ மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்யாதவர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் பழுதடைந்தால் அது தொடர்பாக அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாநகராட்சியின் கல்வித் துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com