தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ""பிரதமர் அவர்களே, கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதமின்றி அறிவிக்க வேண்டுகிறேன். கேரளத்தில் லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலமும், வாழ்க்கைச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு சுட்டுரை பதிவில், ""கேரளா மட்டுமன்றி, தற்போது கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் கனமழையால் மிகப் பெரிய அளவிலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் நமது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. நம்முடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com