"கைத்தறி நெசவாளர்களுக்கான நிலுவைத் தொகையை ஏப்ரலில் வழங்க ஸ்மிருதி இரானி உறுதி'

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பு ஊக்குவிப்பு நிலுவைத் தொகை வரும் ஏப்ரலில் வழங்கப்படும் என்று மத்திய

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பு ஊக்குவிப்பு நிலுவைத் தொகை வரும் ஏப்ரலில் வழங்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளதாக தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
புது தில்லியில் அமைச்சர் ஸ்மிருதி இரானியை தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். 
அதேபோன்று, ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவையும் நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியதாவது:
கைத்தறி நெசவாளர்களுக்கு பராமரிப்பு ஊக்குவிப்பு நிதியாக தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.40 கோடியை மத்திய ஜவுளித் துறை மூலம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2015-16, 2016-17 ஆகிய இரு ஆண்டுகள் அந்த நிதி வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகை ரூ.93.54 கோடி யாகும். அந்த நிதியை வழங்குமாறு அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தினேன். அந்த நிதியில் முதலாமாண்டு நிதியை ஏப்ரலில் தருவதாகவும், மீதம் உள்ள தொகையை அதன்பிறகு வழங்குவதாகவும் அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளார்.
பராமரிப்பு ஊக்குவிப்பு தொகையைப் பொருத்தமட்டில் ரூ.30 லட்சத்துக்கு மேல் வரவு - செலவு கொண்டுள்ள கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு ஒரு உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சங்கங்களுக்கு இந்த முறையை அறிவிப்பது சரியாக இருக்காது என்று அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அதுகுறித்து முடிவு எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 
ரயில்வே கோரிக்கை: இதேபோன்று, அகலப் பாதைப் பணிக்காக சென்னை - காரைக்குடி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதில் சென்னையில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை - விழுப்புரம் வரையிலும், இரண்டாம் கட்டமாக விழுப்புரம்- திருவாரூர் வரையிலும் அகலப் பாதைப் பணிகள் முடிந்துள்ளன. 
இத்தை தொடர்ந்து திருவாரூர் - காரைக்குடி இடையேயான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், காரைக்குடி - பட்டுக்கோட்டைக்கு அப்பணிகள் மாற்றப்பட்டது. இதனால், பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் தடைபட்டது. தற்போது தொடங்கியுள்ள இப்பணியை விரைந்து முடிக்கும் வகையில், இந்த நிதியாண்டில் போதுமான நிதியை ஒதுக்குமாறு ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதைக் கண்டிப்பாக செய்து தருவதாக அமைச்சர் கூறினார் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com