அயோத்தி வழக்கு: சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடி

அயோத்தி வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

அயோத்தி வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
முன்னதாக அயோத்தி வழக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்னைக்குரிய நிலத்தை  சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய அமைப்புகள் 3 பிரிவுகளாக சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுதாரர்கள் மூவரும் தங்களுக்குதான் அந்த நிலத்தின் மீது முழு உரிமை உண்டு என்று கோரி மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி உள்பட மேலும் பலர் இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தனர். ஆனால், புதிதாக மனுத்தாக்கல் செய்தவர்களின் மனுக்களை நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. 
எனினும், "அயோத்தியில் வழிபாடு நடத்த எனக்கு அடிப்படை உரிமை உள்ளது. இது சொத்துரிமையைவிட உயர்வானது' என்று உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com