குரங்கணி மலையில் தீ தடுப்பு பாதை வேண்டும்: சுற்றுச்சூழல் செயலரிடம் தேனி எம்.பி. மனு

தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் தீ தடுப்பு பாதை (ஃபையர் லைன்) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல்

தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் தீ தடுப்பு பாதை (ஃபையர் லைன்) அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறையின் செயலர் சி.கே. மிஸ்ராவிடம் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.பார்த்திபன் புதன்கிழமை நேரில் மனு அளித்தார்.
இது தொடர்பாக புது தில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தில் அத்துறையின் செயலர் சி.கே. மிஸ்ராவிடம் தேனி தொகுதி எம்பி ஆர்.பார்த்திபன் புதன்கிழமை நேரில் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: 
தேனி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் தீ சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து வனங்களைப் பாதுகாக்கும் பொருட்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வும் அளிக்கவும் வன மேலாண்மை நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வேண்டும். 
இதனால், தீ தடுப்பு பாதை, கண்காணிப்புக் கோபுரங்கள் அமைப்பது, தீ கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துவது, நீர் சேமிப்பு கட்டுமானங்களை உருவாக்குவது, தீ அணைப்பு பிரிவுகளை ஏற்படுத்துவத்துவது, வன அதிகாரிகளுக்கு மேம்பட்ட பயிற்சியை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com