4 ஆண்டு பாஜக ஆட்சியில்ஊழல், முறைகேடு அதிகரிப்பு: அஜய் மாக்கன் குற்றச்சாட்டு

மத்தியில் நான்காண்டு கால பாஜக கூட்டணி ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன என தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.

மத்தியில் நான்காண்டு கால பாஜக கூட்டணி ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன என தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார்.
பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சி தோல்வியடைந்துவிட்டதாக கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றச் சாலையில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் அஜய் மாக்கன் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தவறான ஆட்சியில் நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊழல்களையும், முறைகேடுகளையும் கண்டு வருகிறது. பாஜகவின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடியும், லலித் மோடியும் நாட்டை விட்டு தப்பிக்க முடிந்தது. பாஜக அமைச்சர் பியூஷ் கோயலின் நிறுவனம் பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தும் நிறுவனத்தின் வருவாய் ஒராண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால், தொழிலாளர் துறை அறிக்கையின் படி கடந்த 2016-17 ஆண்டில் வெறும் 4.16 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மட்டும் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயின. காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதாவை பாஜக அரசு அமல்படுத்தவில்லை என்றார் அவர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, முன்னாள் எம்.பி.க்கள் சஜன் குமார், மஹாபல் மிஸ்ரா, ரமேஷ் குமார் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com