பருவநிலை மாற்ற பிரச்னைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வு

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ளத் தேவையான செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் இம்ரான் ஹுசைன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ளத் தேவையான செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் இம்ரான் ஹுசைன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் இம்ரான் ஹுசைன் பேசுகையில், இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். புதுப்பிக்கவல்ல எரிசக்தியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். படிம எரிப்பொருள் பயன்பாட்டை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தில்லி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என்றார்.
இக்கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சி, பொதுப்பணித் துறை, சுகாதாரம், மின்சாரம், தொழில், வெள்ளக்கட்டுப்பாடு, வருவாய், போக்குவரத்து ஆகிய துறைகளின் அதிகாரிகளும்; தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, தில்லி வளர்ச்சி ஆணையம், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி மாநகராட்சிகள், தில்லி கன்டோன்மென்ட், காவல்துறை, போக்குவரத்துக் காவல் துறை, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com