பழைய வாகனங்களை இரும்பு கழிவுகளாக்கும் விதிமுறைகளைக் கோரும் பொதுமக்கள்!

தில்லியில் 15 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களை இரும்பு கழிவுகளாக (ஸ்க்கிராப்) செய்வதற்கான

தில்லியில் 15 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களை இரும்பு கழிவுகளாக (ஸ்க்கிராப்) செய்வதற்கான நடைமுறைகள் குறித்த தகவல்கள் கோரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
தில்லியில் 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, அதுபோன்ற வாகனங்களைப் பறிமுதல் செய்வது தொடர்பான பணியை தில்லி போக்குவரத்துத் துறையினர் தொடங்கியுள்ளனர். 
இந்நிலையில், பழைமையான வாகனங்களை ஸ்க்ராப் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தகவல்களை பெறுவதற்காக அதிகளவில் வந்து செல்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் ஆகியவை தில்லி சாலைகளில் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தில்லி போக்குவரத்துத் துறையானது தற்போது 15 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களின் மீது குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்று இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு ரத்து செய்யப்பட்டுள்
ளன.
இது குறித்து ஷேக் சராய் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில், "பழைய வாகனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் குறித்து கேட்டறிவதற்காக ஏராளமான பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். 
மேலும், பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கு தானாக விரும்பும் வாகன உரிமையாளர்களிடமிருந்து கோரிக்கையும் எங்களுக்கு வரப்பெறகிறது' என்றார்.

என்ன செய்ய வேண்டும்?
பழைய வாகனங்களின் பதிவு எண்ணை ரத்து செய்யவதற்கு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் உரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன உரிமம் வழங்கும் அதிகாரிக்குக் கடிதம் எழுத வேண்டும். அக்கடிதத்துடன் அசல் பதிவுச் சான்றிதழ், வாகன சேசிஸ் பகுதி, வாகனம் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதாக ஸ்கிராப் டீலரிடமிருந்து ஒரு கடிதம் ஆகியவற்றை இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
இந்நிலையில், வாகனப் பதிவு எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க விரும்பினால், அதற்கான தனி விண்ணப்பத்தை வாகன உரிமையாளர்கள் அளிக்க வேண்டும். போக்குவரத்துத் துறையானது தங்களது தரவுத்தளத்தில் இருந்து பதிவு நீக்கப்பட்ட 15 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில் தெற்கு தில்லி பகுதியில் இந்த வாரம் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com