சுசீந்திரம் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

சுசீந்திரம் புதிய பாலத்தில் வாகனப் போக்குவரத்து தொடங்கியது. பழைய பாலம் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சுசீந்திரம் புதிய பாலத்தில் வாகனப் போக்குவரத்து தொடங்கியது. பழைய பாலம் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் பகுதியில் குறுகலான பாலம் இருந்தது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டின்பேரில், ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த புதிய பாலத்தின் வழியாக பரீட்சார்த்த முறையில் பேருந்துகள் ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டன. பின்னர் பாலத்தின் இருபுறமும் தூண்கள் அமைக்கும் பணியும், வர்ணம் தீட்டும் பணியும் நடைபெற்றது.
இதனிடையே, புதிய பாலத்தை பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். மேலும், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் புதிய பாலத்தின் வழியாக பேருந்துகளை இயக்கலாம் என்றும் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவித்தனவாம். இதையடுத்து, பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
மேலும், அனைத்து வாகனங்களும் புதிய பாலம் வழியாக இயக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் போலீஸ் நிலைய சாலை வழியாக தேரூர்,மருங்கூர் செல்லும் வாகனங்கள் மட்டும் பழையபாலம் வழியாக இயக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com