இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: 838 பேர் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் 838 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் 838 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
நாகர்கோவில், டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இத் தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இத்தேர்வுக்காக நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 2,117 பேரும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் 873 பேரும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 1,022 பேர் என மொத்தம் 4,012 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில், 184 பேர் கலந்துகொள்ளவில்லை. மேலும், 70 மாற்றுத்திறனாளிகள் தேர்வுகளில் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் ஜோசப் கான்வென்ட், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி என 5 தேர்வு மையத்திலும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் மார்த்தாண்டம், எல்.எம்.எஸ். ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 3 தேர்வு மையத்திலும், தக்கலை கல்வி மாவட்டத்தில் தக்கலை, அரசு மேல்நிலைப்பள்ளி, அமலா கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி என 2 தேர்வு மையங்கள் என மொத்தம் 10 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com