தோவாளையில் மலர் வணிக வளாக கட்டுமானப் பணி: எம்.பி. ஆய்வு

தோவாளை பகுதியில் நடைபெற்று வருகின்ற மலர் வணிக வளாகம் உள்ளிட்ட திட்டப் பணிகளை விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.

தோவாளை பகுதியில் நடைபெற்று வருகின்ற மலர் வணிக வளாகம் உள்ளிட்ட திட்டப் பணிகளை விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.
தோவாளையில் மலர் வணிக வளாகம் கட்ட வேளாண்மை விற்பனைக் குழு நிதியில் இருந்து ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் தோவாளை கிருஷ்ணன் கோயிலில் அறநிலையத் துறை சார்பில் ரூ.30 லட்சத்தில் அன்னதானக் கூடம், ரூ. 12 லட்சத்தில் வாகனங்கள் வைப்பதற்கான அறை கட்டுமானப் பணிகள், கோயில் உள்வளாகத்தில் ரூ. 10 லட்சத்தில் நிறைவடைந்துள்ள அலங்கார ஓடு பதிக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் தோவாளையில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறுகின்ற பாலப் பணியை அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன், வேளாண் வணிக துணை இயக்குநர் சுரேஷ் ஜோஸ், வேளாண்மை விற்பனை குழுவைச் சேர்ந்த விஜி பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com