ஒருங்கிணைந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

கொல்லங்கோடு பேரூராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கொல்லங்கோடு பேரூராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான இப் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து அங்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், களியக்காவிளை, வாள்வச்சகோஷ்டம், நல்லூர், கொல்லங்கோடு பேரூராட்சிகள் ஒருங்கிணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் இப் பேரூராட்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கண்ணநாகம், மேடவிளாகம், சூசைபுரம்காலனி, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி, சிலுவைபுரம், பின்குளம், இரையான்தோட்டம் உள்பட பேரூராட்சியின் 21 வார்டு பகுதிகளிலும் 4 பேரூராட்சிகளின் அதிகாரிகள், பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து, நன்னீரில் தேங்கி கொசுப் புழு உருவாகும் வகையிலான பொருள்களை கண்டறிந்து அழித்தனர். மேலும் பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு கொசுவை தடுப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் அம்புஜம், பேரூராட்சி தனி அலுவலர் சத்தியதாஸ், ஏழுதேசம் பேரூராட்சி செயலர் அலுவலர் ஏசுபாலன், வாழ்வச்சகோஷ்டம் மற்றும் நல்லூர் பேரூராட்சி (பொ) செயல் அலுவலர் சண்முகபாண்டியன் மற்றும் பேரூராட்சிகளின் இளநிலை உதவியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், டெங்கு சர்வே பணியாளர்கள் உள்பட அனைத்துப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
பொது மக்கள் தங்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உபயோகமற்ற பொருள்கள் மற்றும் திடக்கழிவுகளை அகற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் கொசுப் புழு உற்பத்தியை தடுக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com