16இல் அனைத்துப் பேரூராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

குமரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை (ஆக. 16)  நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை (ஆக. 16)  நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை (ஆக. 16) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்குழுவில் அரசு மற்றும் அரசு சாரா உறுப்பினர்கள் 10 பேரை மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார். அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சித் தலைவர் குழுவின் தலைவராகவும்,  கிராம நிர்வாக அலுவலர் குழுவின் செயலராகவும்,  பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தலைமையாசிரியரால் தேர்வு செய்யப்படும் இரண்டு பள்ளிக் குழந்தைகள்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ஒருவர்,  அப்பகுதி அங்கன்வாடி பணியாளர்,  கிராம செவிலியர்,  தொண்டு நிறுவன பிரதிநிதி, சுயஉதவிக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளூர் காவல்துறை பிரதிநிதி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைத் திருமணம் தடுத்தல்,  குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், குழந்தைக் கடத்தல் தடுத்தல், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மறுவாழ்வு குறித்து விவாதித்தல்,  குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல்களை தடுத்தல்,  அனைவருக்கும் கல்வி,  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்,  குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் போன்ற குழந்தைகள் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இதில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் சம்பந்தமான அறிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com