அங்கன்வாடி பணிக்காக 11 மையங்களில் எழுத்து தேர்வு: ஆட்சியர் ஆய்வு

அங்கன்வாடி பணியாளர்களுக்காக குமரி மாவட்டத்தில் 11 மையங்களில் சனிக்கிழமை வ நடைபெற்ற எழுத்து தேர்வில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

அங்கன்வாடி பணியாளர்களுக்காக குமரி மாவட்டத்தில் 11 மையங்களில் சனிக்கிழமை வ நடைபெற்ற எழுத்து தேர்வில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 385 முதன்மை அங்கன்வாடி பணியிடமும், 32 குறு அங்கன்வாடி பணியிடம் மற்றும் 468 அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கும் கடந்த 3 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதன்மை அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு 3 ஆயிரத்து 460 பெண்களும், குறு அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு 200 பேரும், உதவியாளர் பணியிடத்துக்கு ஆயிரத்து 678 பெண்கள் என 5 ஆயிரத்து 338 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு குமரி மாவட்டத்தில் 11 இடங்களில் நடைபெற்றது. முதன்மை அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்களுக்கான எழுத்து தேர்வு காலையிலும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு பிற்பகலிலும் நடைபெற்றது. காலை மற்றும், மாலையில் நடைபெற்ற எழுத்து தேர்வுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் டதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வினை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com