மீன்பிடி வலை, உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க கோரிக்கை

மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு எழுத்தாளர் இயக்கத் தலைவர் திருத்தமிழ் தேவனார் வெளியிட்ட அறிக்கை: புதிய தொழிற்சாலைகள் பல கடற்கரையில் கட்டப்படுவதால், அவற்றிலிருந்து வெளியாகும் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இதனால் கடலில் பல மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல்கள் மீனவர்களைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
சரக்கு மற்றும் சேவை வரி முறையால் மீன், கருவாடு, உப்பு, வலை ஆகியவற்றுக்கு 5 சதவீதமும், படகு உபகரணங்களுக்கு 12 சதவீதமும், கனமான ஈயக் குண்டுகள், படகு இயந்திரங்கள், வலைநூல் போன்றவைகளுக்கு 18 சதவீதமும், மிதவைகள் போன்ற உபகரணங்களுக்கு 28 சதவீதமும் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது மீனவர்களுக்கு மிகுந்த சுமையை ஏற்படுத்தியுள்ளது. சிறு மீன் வியாபாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
மீனவர்களுக்கு வரி விலக்கு அளிப்பது சம்பந்தமாக கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழக அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் பேசியுள்ளன. இன்னும் அதற்கான உத்தரவு எதுவும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com