குமரி மாவட்டத்தில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
குமரி மாவட்டத்தில் கடந்த நவ. 29 ஆம் நள்ளிரவு ஒக்கி புயல் தாக்கியது இதனால் நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்து விடாமல் 3 நாள்கள் பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுசீந்திரம் தாணுமலாயசுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் திருப்பதிசாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பின்னர் டிச. 2 ஆம் தேதி மாலை முதல் மழை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை(டிச.8 )பிற்பகல் நாகர்கோவில் நகரம், சுசீந்திரம், கொட்டாரம், கன்னியாகுமரி, தோவாளை, ஆரல்வாய்மொழி, பார்வதிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த இந்த மழையினால் நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதிகளான மணிமேடை சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரிசாலை, வடசேரி, மீனாட்சிபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. பள்ளி, கல்லூரி முடியும் நேரத்திலும் மழை தொடர்ந்து பெய்ததால் மாணவர்,ம ôணவிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com