தாழக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, தாழக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலையில்

சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, தாழக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நூதனப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒக்கி புயல் காரணமாக, குமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அதிக அளவில் மரங்கள் சாய்ந்ததோடு, சாலைகளும் சேதமடைந்தன.
குறிப்பாக, தாழக்குடி வீரநாராயணமங்கலம் சாலை மழை காரணமாக முற்றிலும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்லூரி வாகனங்களும், அரசுப் பேருந்தில் கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதுவரை சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமைவகித்தார். கிளைச் செயலாளர் ரவீந்திரன் வரவேற்றார். தாழக்குடி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒன்றியச் செயலாளர் மிக்கேல் தொடங்கி வைத்து பேசினார். மேலும், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணி, மலைவிளா பாசி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினர்.
இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்டச் செயற்குழு உறுப்பினர் உஷா, அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கும் விதமாக, தாடிக்குடி சந்திப்பில் இருந்து மலர்வளையத்த்துடன் பேரணியாக வந்து தாழக்குடி வீரநாராயணமங்கலம் பகுதியில் பழுதான சாலையில் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனால், இப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com