பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவி

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட  15 பழங்குடி குடியிருப்புகளில், சென்னை கிருஷ்ணபிரியா அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட  15 பழங்குடி குடியிருப்புகளில், சென்னை கிருஷ்ணபிரியா அறக்கட்டளை சார்பில் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 
இந்த அமைப்பின் தன்னார்வலர்கள்  புறாவிளைமலை, ஆலங்குழி, வில்லுசாரிமலை, கீரப்பாறை மலை, வெக்காலிமூடு, காயல்கரை, ஆண்டிபொற்றை, தோணிக்குழி,  எட்டாம்குன்று, வளையம்தூக்கி, தச்சமலை, மாறாமலை, தோட்டமலை, கோருவைக்குழி,  கூவைக்காட்டு மலை, வெள்ளாம்பிமலை ஆகிய பழங்குடி குடியிருப்புகளில் நிவாரணப் பொருள்களாக அரிசி, பால்பவுடர், பிஸ்கட், காய்கனிகள்,  போர்வை போன்றவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில்  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலர் ரெகுகாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com